/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.முக்குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவிகள் 7 பேர் காயம்
/
அ.முக்குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவிகள் 7 பேர் காயம்
அ.முக்குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவிகள் 7 பேர் காயம்
அ.முக்குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவிகள் 7 பேர் காயம்
ADDED : டிச 23, 2025 06:07 AM
நரிக்குடி: நரிக்குடி அ.முக்குளம் பள்ளி மாணவிகள் 7 பேர் சென்ற ஆட்டோ கவிழ்ந்து பலத்த காயம் அடைந்தனர்.
நரிக்குடி அ. முக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அழகாபுரியை சேர்ந்த 6, 8 ம் வகுப்பு மாணவிகள் நேற்று காலை அரையாண்டு தேர்வு எழுதினர். மதியம் 2:00 மணிக்கு ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். பஸ் இல்லாததால் 7 மாணவிகள் ஆட்டோவில் வீடு திரும்பினர்.
ஆட்டோவை அ. முக்குளம் மணிமாறன் 23, ஓட்டினார். அழகாபுரி காலனி அருகே சென்றபோது நிலை தடுமாறி நரிக்குடி - திருப்புவனம் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மாணவிகள் ஸ்ரீ கனிஷ்கா 13, கனிபிரியா 11, வர்ஷினி 13, தனுஷ்கா 13, பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அட்சயா 13, சபரிமா 12, மோனிஷா 13, லேசான காயத்துடன் அ. முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.