/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கனரா வங்கி ஏ.டி.எம்.ல் 3வது முறையாக கொள்ளை முயற்சி
/
கனரா வங்கி ஏ.டி.எம்.ல் 3வது முறையாக கொள்ளை முயற்சி
கனரா வங்கி ஏ.டி.எம்.ல் 3வது முறையாக கொள்ளை முயற்சி
கனரா வங்கி ஏ.டி.எம்.ல் 3வது முறையாக கொள்ளை முயற்சி
ADDED : செப் 26, 2024 04:27 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி மெயின் ரோடு கனரா வங்கி ஏ.டி.எம்.மி-ல் மூன்றாவது முறையாக நேற்று கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த ஏ.டி.எம்.மில் நேற்று அதிகாலை அலாரம் அடித்துள்ளது. தொடர்ந்து சத்தம் கேட்டதையடுத்து அப்பகுதியினர் சென்று பார்த்த போது ஏ.டி.எம்.,மில் மிஷின் பாக்ஸ் உடைக்கப்பட்டிருந்தது.
போலீசார் சோதனையிட்ட போது அடையாளம்தெரியாத நபர்கள் கண்காணிப்பு கேமராவை கீழே திருப்பி விட்டு உடைக்க முயன்றது தெரிய வந்தது. அக்கம்பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைரேகை நிபுணர்கள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணி நேரமும் போக்குவரத்துள்ள மெயின் ரோட்டில் அமைந்த இதே ஏ.டி.எம்.,மில் 2018, 2022ல் இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. 3வது முறையாக நடந்த கொள்ளை முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

