ADDED : நவ 22, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அருண்குமார் 23. இவர் நவ.18 இரவு தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் டூ வீலரை காணவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தனிப்படை போலீசார் தேடுதலில் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ் 18 ,, 17 வயது சிறுவனும் டூவீலரை திருடி சென்றது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

