/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 1.89 லட்சம்! பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் 14.36 லட்சம் பேர்

UPDATED : டிச 20, 2025 08:16 AM
ADDED : டிச 20, 2025 05:33 AM

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நேற்ற வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 521 பேர் இடம்பெற்றுள்ளனர். 1 லட்சத்து 89 ஆயிரத்து 964 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஜன.1ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நவ. 4 முதல் நடந்து வந்தது. மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளிலும், நிரந்தர முகவரி மாற்றம், தொடர்பு கொள்ள இயலாதவர்கள், இறப்பு, இரட்டைப் பதிவு இனங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக 1 லட்சத்து 89 ஆயிரத்து 964 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற இயலாத நிலையில் அவர்களது பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பட்டியல்களை பார்த்துக் கொள்ளலாம்.
![]() |
மாவட்டத்தில் மொத்த ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 1901 ஆக இருந்த நிலையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று வரம்பு மாற்றியமைக்கப்பட்டதால், மறு சீரமைப்புக்கு பின் 98 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்து, தற்போது 1999 ஓட்டுச்சாவடிகள் உள்ளது.
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த 1901 அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றினர். வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், இதர துறைகளின் 199 அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றினர்.