/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 11 கால்நடை மருத்துவர்கள் நியமனம்

ADDED : நவ 05, 2025 03:30 AM
விருதுநகர்: புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் மருந்தியல் துறைக்கு புதிதாக 11 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் மருந்தியல் துறை சார்பில் மருந்துகள், ரசாயனங்கள் எவ்வாறு எலி ஆகிய உயிரினங்களுடன் வினைபுரிகிறது.அதனால் ஏற்படும் தோற்றம், விளைவுகள், சிகிச்சை பயன்பாடுகள், உயிரினங்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ஒரு கால்நடை மருத்துவர் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் புதிய அரசு மருத்துவக்கல்லுாரி என்பதால் நியமனம் தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளிலும் தலா ஒரு கால்நடை மருத்துவரை நியமனம் செய்து மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. தற்போது அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளிலும் கால்நடை மருத்துவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.