/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லோக்சபா தேர்தலால் களை இழந்து வரும் கோயில் திருவிழாக்கள்
/
லோக்சபா தேர்தலால் களை இழந்து வரும் கோயில் திருவிழாக்கள்
லோக்சபா தேர்தலால் களை இழந்து வரும் கோயில் திருவிழாக்கள்
லோக்சபா தேர்தலால் களை இழந்து வரும் கோயில் திருவிழாக்கள்
ADDED : ஏப் 03, 2024 07:06 AM
சாத்துார் : லோக்சபா தேர்தலால் கோயிலில் நடைபெறும் பங்குனிப் பொங்கல் விழாக்கள் களை இழந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் பங்குனி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம்.
கோயில் பொங்கல் விழாவின்போது ஆடல் பாடல், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம், என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.மேலும் சாமி வீதி உலாவும் நடைபெறும்.
லோக்சபா தேர்தல் என்பதால் தற்போது நடைபெற்று வரும் பங்குனி பொங்கல் கோயில் திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.
சுவாமி ஊர்வலம் வலம் வரும் பாதையில் கட்டுப்பாடு என பல்வேறு தடைகளை தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறை என கூறி தடுத்து வருகின்றனர்.
பாரம்பரியமாக நடந்து வந்த கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் சுவாமி ஊர்வலத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் ஹிந்துக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
இதனால் பங்குனி பொங்கல் விழாக்கள் களை இழந்த விழாக்களாக நடைபெற்று வருகின்றன.
கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடுகளையும் தடைகளை தளர்த்திட பரிசீலனை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

