/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழில் நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கம்
/
தொழில் நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கம்
ADDED : ஆக 21, 2024 07:01 AM

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் மின்சார வாகனம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான தொழில் நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்விக் குழுமம் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வாழ்த்தினார். டீன் மாரிசாமி துவக்கி வைத்தார். மின்னணுவியல் துறை தலைவர் வளர்மதி வரவேற்றார். சென்னை வேலியோ இந்தியா பிரைவேட் லிமிடெட், கல்லுாரி முன்னாள் மாணவர் குருமூர்த்தி பேசினார்.
கருத்தரங்கில் மின்வாகனங்களின் அடிப்படைத் தகவல்கள், முக்கியத்துவம், சுற்றுச்சூழல், பொருளாதாரவியல் முன்னேற்றம், சார்ஜிங் வசதி, பேட்டரி வாழ்க்கை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் ராமலட்சுமி, விமலா, ராமசாமி, தனம் செய்தனர்.

