/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் அடிக்கடி ஏற்படும்டிராபிக் நெரிசல்களால் அவதி
/
விருதுநகரில் அடிக்கடி ஏற்படும்டிராபிக் நெரிசல்களால் அவதி
விருதுநகரில் அடிக்கடி ஏற்படும்டிராபிக் நெரிசல்களால் அவதி
விருதுநகரில் அடிக்கடி ஏற்படும்டிராபிக் நெரிசல்களால் அவதி
ADDED : ஏப் 21, 2024 03:37 AM
விருதுநகர்: விருதுநகருக்கு காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்வதற்காக அரசு, தனியார் பஸ்களில் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். அதே போல அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார் பகுதிகளில் இருந்து வரும் பஸ்களில் விருதுநகரை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் இருந்து பலரும் வேலைக்காக விருதுநகருக்கு வந்து செல்கின்றனர்.
இப்படி வருபவர்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால் நகரின் முக்கிய ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு, மீனாம்பிகை பங்களா பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது.
இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

