நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் தாலுகா எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் போலீசார் சிவானந்தா காலனியை சேர்ந்த கணேசன்,54, அரசு அனுமதியின்றி எவ்வித பாதுகாப்பு இல்லாமல் வைத்திருந்த 20 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கோவிலாங்குளம் பெரிய கரிசல்குளத்தைச் சேர்ந்த சாமிநாதன், 59, வீட்டிலிருந்த 12 குரோஸ் கருந்திரிகளை எஸ்.ஐ., ராபியம்மாள் பறிமுதல் செய்தார்.
டவுன் எஸ்.ஐ., முத்துராஜ் சொக்கலிங்கபுரம் அப்பாசாமி தெருவில் உள்ள மணிகண்டன், 52, வீட்டிலிருந்த குடோனில் 2 ஆயிரம் குரோஸ் திரிகளை பறிமுதல் செய்தார். மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

