/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தைத் திருமணங்களை தடுக்க பள்ளி மேலாண்மை குழுக்கள் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
/
குழந்தைத் திருமணங்களை தடுக்க பள்ளி மேலாண்மை குழுக்கள் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
குழந்தைத் திருமணங்களை தடுக்க பள்ளி மேலாண்மை குழுக்கள் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
குழந்தைத் திருமணங்களை தடுக்க பள்ளி மேலாண்மை குழுக்கள் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
ADDED : செப் 13, 2024 04:39 AM
விருதுநகர்: 18 வயதுக்கு குறைவான குழந்தைத் திருமணங்களை தடுக்கபள்ளி மேலாண்மை குழுக்கள் முயற்சிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:
18 வயதிற்கு குறைவான வயதில் திருமணம் முடிந்து 19 வயதுக்குள் கருத்தரித்த தாய்மார் எண்ணிக்கை 400 லிருந்து 500 ஆக உள்ளது.
குழந்தையினுடைய தாயாக இருக்கக்கூடிய எடை குறைவான 18 வயதுக்கு உட்பட்ட மாணவி அல்லது சிறுமி ஒரு குழந்தைக்கு தாயாகும் போது, அந்த குழந்தையும் எடை குறைவாக பிறக்கிறது.
இதை தடுப்பதற்கு பள்ளி மேலாண்மைக்குழு முயற்சி செய்ய வேண்டும். உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு மாவட்டத்தின் கல்வி அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இப்படி பல்வேறு பொருளாதார திட்டங்கள் இருக்கிற போது இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் நமது ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லுாரியில் சேராமல் இருப்பது என்பது ஒரு அவல நிலையே.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக, உறுப்பினராக அந்த பள்ளியை நன்றாக செயல்படுத்த வேண்டும், என்றார்.
இதில் 11 வட்டாரங்களை சார்ந்த 190 அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், உறுப்பினர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் அமுதா, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

