/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; உதவி மின் பொறியாளர் கைது
/
முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; உதவி மின் பொறியாளர் கைது
முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; உதவி மின் பொறியாளர் கைது
முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; உதவி மின் பொறியாளர் கைது
ADDED : ஜூலை 29, 2024 11:20 PM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கூடுதல் பளு மின்சாரம் வினியோகத்திற்கு முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சிவகாசி அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரன். இவர் சல்வார்பட்டியில் உமா பிளாஸ்டிக் என்ற பெயரில் பட்டாசு தயார் செய்வதற்கு தேவைப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனிக்கு மும்முனை மின் இணைப்பு உள்ளது. அதற்கு கூடுதல் பளு மின் வினியோகம் கேட்டு 2024 பிப்., 2ல் வெம்பக்கோட்டை மின் பகிர்மான கழகத்தில் மனு கொடுத்தார். அதற்கு வெம்பக்கோட்டை மின் பகிர்மான உதவி மின் பொறியாளர் சேதுராமன், ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டு, பின் ரூ.10 ஆயிரமாவது லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கூடுதல் பளு மின்சாரம் கொடுக்க முடியும் என கூறியுள்ளார்.
ரவிச்சந்திரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். நேற்று மாலை 4:00 மணிக்கு ரவிச்சந்திரனின் பிளாஸ்டிக் கம்பெனியில் வைத்து, அவரிடம் உதவி மின் பொறியாளர் சேதுராமன் லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சால்வன் துரை, பூமிநாதன் குழுவினர் சேதுராமனை கைது செய்தனர்.

