/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரண்டு முறை ஜெயித்த மாணிக்கம் தாகூரை பார்த்ததுண்டா விருதுநகர் தொகுதி மக்களுக்கு ராதிகா கேள்வி

ADDED : மார் 28, 2024 05:37 AM

மதுரை: ''விருதுநகர் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற காங்., மாணிக்கம் தாகூரை யாராவது பார்த்ததுண்டா'' என பா.ஜ., வேட்பாளர் ராதிகா கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் தொகுதிக்குட்பட்ட மதுரை சிலைமானில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:இத்தொகுதியில் நல்லது செய்யும் வாய்ப்பை எனக்கு அளிக்க வேண்டும். இதற்கு முன் இரண்டு முறை இங்கு வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூரை யாராவது பார்த்ததுண்டா. அவர் வர மாட்டார். அவர் ஒதுங்கிக்கொள்ளட்டும். நல்லது செய்ய நான் வந்திருக்கிறேன். இந்த மண் எவ்வளவு பெருமைக்குரியது என்பதை அறிவேன். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்றார். அதையேதான் பா.ஜ.,வும் சொல்கிறது என்றார்.
சரத்குமார் பேசியதாவது: விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு ரூ.32க்கு நேரடியாக அரிசி வாங்குகிறது. மாநில அரசு ரூ.3க்கு வாங்கி உங்களுக்கு இலவசமாக கொடுக்கிறது. எனவே ரூ.29 மத்திய அரசு கொடுக்கிறது. இலவச அரிசி உங்கள் வீட்டிற்கு வர காரணம் மத்திய அரசு தான். இப்போதுள்ள தி.மு.க., ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி. ஒருத்தர் உள்ளே செல்கிறார். வெளியே வருகிறார். மந்திரி ஆகிறார். இதெல்லாம் யோசித்து பார்க்க வேண்டும். இளைய சமுதாயம் நன்றாக இருக்க நல்ல தலைவர் வேண்டும். அது பிரதமர் மோடி தான் என்றார்.