ADDED : ஜூலை 24, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் நகர வட்டார காங்., சார்பில் காமராஜர் பிறந்த தின விழா, நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காங்., நிர்வாகிகள் காமராஜர், சிவாஜி கணேசன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இலவசவேஷ்டி, சேலை, வழங்கினர்.
நகரத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். சிவகாசி அசோகன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பிரபுமன்ற தலைவர் வேலுச்சாமி, வட்டாரத் தலைவர்கள் சுப்பையா, உள்பட பலர் உடனிருந்தனர்.

