ADDED : ஜூலை 23, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சிவகாசி ரெங்கபாளையம் பகுதி மக்கள் கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:
எங்கள் ஊரில் 2023 அக். 17ல் விபத்து நடந்த கனிஷ்கர் பட்டாசு ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. எங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஆலை அமைந்துள்ளதால் அச்சப்படுகிறோம்.
பட்டாசு ஆலையை மூட வேண்டும், என மனு அளித்தனர். இதே போல் பட்டாசு ஆலையை திறக்க கோரி அதில் பணிபுரிந்த தொழிலாளர்களும் மனு அளித்துள்ளனர்.

