ADDED : ஏப் 12, 2024 04:15 AM

சிவகாசி: சிவகாசியில் லோக்சபா தேர்தலில் மக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவப்படையினர், போலீசார் பங்கேற்ற அணிவகுப்பு நடந்தது.
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் புறப்பட்ட அணிவகுப்பில் நாகாலாந்து மாநிலம் பட்டாலியன் போலீசார், சிவகாசி துணைக் கோட்டத்தில் பணி புரியும் போலீசார் பங்கேற்றனர்.
ஏ.டி.எஸ்.பி., சூரியமூர்த்தி சிவகாசி டி.எஸ்.பி., சுப்பையா கலந்து கொண்டனர் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய அணிவகுப்பு சிவகாசி திருத்தங்கல் ரோடு, காமராஜர் பூங்கா வரை சென்று நிறைவடைந்தது.
* ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது.
டி.எஸ்.பி.முகேஷ் ஜெயக்குமார் தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் கணேசன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மங்காபுரம் பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை போலீசார், மத்திய பாதுகாப்பு படை போலீசார் என நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

