/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம்; மாணிக்கம் தாகூர் பிரசாரம்

ADDED : ஏப் 03, 2024 07:08 AM

விருதுநகர் : ராகுல் பிரதமரானால் மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். சிலிண்டர் விலை ரூ. 500 ஆக விலை நிர்ணயம் செய்து வழங்கப்படும் என காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் அல்லம்பட்டியில் பிரசாரத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
ராகுல் பிரதமரானால் மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரவு வைக்கப்படும். சிலிண்டர் விலை ரூ.500 ஆக நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படும்..
பிரதமர் மோடி தன் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகியோரை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மட்டுமே செய்து உள்ளார்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவற்கான முயற்சிகள் எதையும் செய்யவில்லை.
உலக பணக்கார வரிசையில் இரண்டாவது இடத்திற்கு அதானி வர முக்கிய காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி, என்றார்.
அவருடன் எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன் ஓட்டு சேகரித்தனர்.