/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்
/
சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்
சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்
சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்
ADDED : மார் 31, 2024 05:38 AM

சிவகாசி : சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா வெம்பக்கோட்டையில் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் உறுதியளித்தார்.
விருதுநகர் லோக்பா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதிகா வெம்பக்கோட்டையில் உள்ள தமிழன் கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் ( டாப்மா) ஆதரவு கேட்டு ஓட்டு சேகரிக்க வந்தார்.
அவர்களிடம் பேசுகையில், பட்டாசு தொழிலில் உள்ள பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன். பட்டாசுக்கு உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு முயற்சி செய்வேன். சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தொடர்ந்து அவரிடம் டாப்மா தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விதிவிலக்கு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கண்டிப்பாக முயற்சி செய்வேன் என உறுதியளித்தார். உடன் சரத்குமார், கட்சியினர் இருந்தனர்.
விருதுநகரில் பிரசாரம் செய்து ராதிகா பேசியதாவது: 3ம் முறையாக பிரதமர் மோடி வருவதாக கூறுகின்றனர். அவ்வாறு அவர் வந்தால் நான் பா.ஜ., பிரதிநிதியாக சென்றால் எவ்வளவு வேலைகளை முடிக்க முடியும். நான் இங்கு யாரையும் திட்ட வரவில்லை. 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சி. மாதம் மாதம் யாராவது சிறை சென்று வருகின்றனர் சில கட்சியினர்.
ஏதோ தாய் வீட்டிற்கு செல்வது போல. வேலை, வாய்ப்பு, வளர்ச்சி என்ற மூன்று 'வி'க்களும் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள், விவசாயிகளுக்கு நல்ல திட்டங்கள் என பிரதமர் மோடி நிறைய சாதித்துள்ளார். நாங்கள் ஜெயித்து விட்டால் எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளமாட்டோமா. பிரதமரிடம் பெற்று வாங்கி தருவோம். எங்கள் அணியில் பிரதமர் மோடி தான் தலைவர். உங்கள் அணியில் தலைவர் யார் என்று கூற முடியுமா. ஆகவே எங்கள்கைகளை வளப்படுத்தி என்னை ஆதரித்து மத்தியில் மலரும் தாமரைக்கு உதவிகரமாக இருக்க உதவுங்கள் என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், “ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை அடைப்போம் என்றனர். இப்போது வரை அதை செய்யவில்லை. 10 ஆண்டில் சிறந்த ஆட்சி தந்தவர் பிரதமர் மோடி. ரேங்க் கார்டை காட்டுவது போன்று நாங்கள் தைரியமாக செய்ததை காட்டி ஓட்டு கேட்கிறோம், என்றார்.
இதையடுத்து சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் பேசினார். மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், லோக்சபா பொறுப்பாளர் வெற்றிவேல், இணை பொறுப்பாளர் கஜேந்திரன், சட்டசபை பொறுப்பாளர் ராமஜெயம், இணை பொறுப்பாளர் சங்கரேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

