/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம்
/
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம்
ADDED : ஏப் 04, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து காரியாபட்டி ஆவியூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் பேசியதாவது. கடந்த முறை இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்தேன். தற்போதும் அதே சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வந்துள்ளேன்.
என் உயிருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு மட்டுமே ஓட்டு கேட்டு வருவேன். எங்களின் வேட்பாளர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். உங்கள் பிரச்னைகளுக்கு ஓடோடி வருவார். உங்கள் ஓட்டுகளை ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

