ADDED : ஜூலை 23, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் பேரூராட்சியின் தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த ராஜம்மாள் உள்ளார். இந்நிலையில் இந்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அனைத்து வார்டுகளிலும் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை உடனடியாக சரி செய்து தரக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று பேரூராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கமிட்டி உறுப்பினர்கள் மாரிமுத்து, கருப்பையா தலைமை வகித்தனர். கொத்தனார் சங்க நிர்வாகி முருகன், கடற்கரை முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, தாலுகா செயலாளர் கோவிந்தன், துணை செயலாளர் மகாலிங்கம் பேசினர் . கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

