/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
/
தி.மு.க., வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ADDED : ஆக 12, 2024 11:45 PM

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி 8வது வார்டில் தி.மு.க., வேட்பாளர் நாகஜோதி வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி பா.ஜ., வேட்பாளர் சாந்தி தொடர்ந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
காரியாபட்டி பேரூராட்சி 8வது வார்டில் 2022 ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர் சாந்தி. இவர் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், தி.மு.க., வேட்பாளர் நாகஜோதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாகஜோதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சட்டப்படி செல்லாது என்றும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்தார். இதில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 8ல் விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதுகுறித்த அறிக்கை கலெக்டர் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில் சாந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

