/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு திரி; 4 பேர் மீது வழக்கு
/
பட்டாசு திரி; 4 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 08, 2024 04:51 AM
விருதுநகர் : விருதுநகர் குல்லுார்சந்தை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்தியா 26. இவர் குல்லுார் சந்தை தரைப்பாலத்தில் 30 குரோஸ் வெள்ளை திரிகளை சாக்கு பையில் வைத்திருந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி 42, குல்லுார்சந்தை - அரசகுடும்பன்பட்டி ரோட்டில் 20 குரோஸ் வெள்ளை திரிகளையும், அப்பகுதியைச் சேர்ந்தவர் அய்யணன் 53, குல்லுார்சந்தை - பாலவநத்தம் ரோட்டில் முகாம் அருகே 20 குரோஸ் வெள்ளைத் திரிகளை சாக்கு பையில் பதுக்கி வைத்திருந்தனர், சூலக்கரைப் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்தனர்.
திருத்தங்கல் கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் மோட்சிய ராஜ் 39. இவர் குந்தலப்பட்டி பஸ் ஸ்டாண்டில் 7 குரோஸ் மிஷின் திரியை பதுக்கி வைத்திருந்தை கண்டறிந்து ஆமத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

