/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லஞ்சம் வாங்கிய சாத்துார் வி.ஏ.ஓ.விற்கு ஏப்.18 வரை நீதிமன்ற காவல்
/
லஞ்சம் வாங்கிய சாத்துார் வி.ஏ.ஓ.விற்கு ஏப்.18 வரை நீதிமன்ற காவல்
லஞ்சம் வாங்கிய சாத்துார் வி.ஏ.ஓ.விற்கு ஏப்.18 வரை நீதிமன்ற காவல்
லஞ்சம் வாங்கிய சாத்துார் வி.ஏ.ஓ.விற்கு ஏப்.18 வரை நீதிமன்ற காவல்
ADDED : ஏப் 04, 2024 11:41 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : சாத்தூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான சாத்தூர் வி.ஏ.ஓ. முத்தையாவை, ஏப்.18 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் விருதுநகர் மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த குட்டி, 41, கத்தாலம்பட்டி ஊராட்சியில் வாங்கிய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்ற செய்ய விண்ணப்பித்துள்ளார். இதற்கு அப்பகுதி வி.ஏ.ஓ.முத்தையா ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை முத்தையா லஞ்சப் பணத்தை பெறும்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கைது செய்தனர்.
நேற்று காலை 10:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முத்தையா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப். 18 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார். இதனையடுத்து முத்தையா விருதுநகர் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.