/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : மார் 23, 2024 04:52 AM

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட படந்தால் ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
படந்தால் ஊராட்சியில் முத்துராமலிங்கபுரம், மருதுபாண்டியர் நகர், தென்றல் நகர், வசந்தம் நகர், வைகோ நகர், அனுமன் நகர், என பத்துக்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.
படந்தால் ஊராட்சிக்கு அருகில் ஓடும் வைப்பாறு நதியில் உறை கிணறு அமைத்து ஊராட்சியில் உள்ள 8 மேல்நிலைத்தொட்டிகள் மூலம் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முத்துராமலிங்கபுரம் நகரில் இருந்து வசந்தம் நகருக்கு செல்லும் குடிநீர் பகிர்மான குழாயில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வாறுகாலில் கலந்து வருகிறது. ஏற்கனவே ஊராட்சிக்கு மிக குறைந்த அளவு குடிநீர் கிடைத்து வரும் நிலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

