/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
86 பேர் பட்டியலில் விடுபட்டதை கண்டித்து இயந்திரங்களை கொண்டு செல்ல எதிர்ப்பு

ADDED : ஏப் 20, 2024 04:46 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தில் 86 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டதை கண்டித்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தென்காசி லோக்சபா தொகுதி ராஜபாளையம் சட்டசபைக்குட்பட்ட கணபதி சுந்தர நாச்சியார்புரம் ஊராட்சியில் இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில், கடந்த முறை வாக்கு செலுத்தியவர்களில் 86 நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் ஓட்டு செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டவர்களுடன் ஓட்டுச்்சாவடி முகர்வர்களும் சேர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விடுபட்டவர்கள் மாலை வரை காத்திருந்தனர்.
6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் அதிருப்தியில் இருந்த முகவர்கள் படிவத்தில் கையெழுத்திட மறுத்ததால் இயந்திரத்தை மூடி சீல் வைக்க முடியவில்லை.
149 வது ஓட்டுச்சாவடியில் 83 சதவீதமும் 150ல் 79 சதவீதமும் வாக்குப்பதிவான நிலையில் ஓட்டுசாவடி முன்பு பொதுமக்களுடன் சேர்ந்து அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் துறையினர் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் முகவர்கள் படிவத்தில் கையெழுத்திட்டனர். அதன் பின் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.