/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2.5 கிலோ குட்கா, ரூ.1.63 லட்சம் பறிமுதல்
/
2.5 கிலோ குட்கா, ரூ.1.63 லட்சம் பறிமுதல்
ADDED : மே 19, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர், : சிவகாசியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நம்பி நாயுடு தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தார். நேற்று மதியம் அவரது வீட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது 2.5 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்ப்பட்டு இருப்பதையும், விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் வைத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.இதனையடுத்து மாடசாமியை கைது செய்து வீட்டில் இருந்த குட்கா புகையிலை பொருட்களையும், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

