/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரமண ஆசிரமம் சார்பில் ரூ.1.50 கோடியில் வகுப்பறைகள்
/
ரமண ஆசிரமம் சார்பில் ரூ.1.50 கோடியில் வகுப்பறைகள்
ADDED : ஏப் 24, 2024 12:11 AM
திருச்சுழி: திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை ரமண ஆசிரமம் சார்பில் ஒரு 1.50 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில்1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 450 பேர் படிக்கின்ற வகையிலே வகுப்பறைகள் உள்ளது.
இதனால் இட நெருக்கடி ஏற்பட்டது. விளையாட்டு மைதானம் ஆய்வகம் போன்ற வசதிகளும் இல்லை.
கூடுதல் வகுப்பறைகள் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை திருவண்ணாமலை ரமணாஸ்ரம நிர்வாகத்திடம் வைத்தனர்.
ஆசிரம நிர்வாகிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கூடுதல் வகுப்பறைகள் 1.50 கோடி செலவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் 6 வகுப்பறைகள், தண்ணீர் வசதி கூடிய கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
ஆசிரம நிர்வாகி சந்திரமௌலி, இன்ஜினியர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் சித்திரவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

