/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
----நீர் காத்த அய்யனார் சுவாமி சித்திரை திருவிழா
/
----நீர் காத்த அய்யனார் சுவாமி சித்திரை திருவிழா
ADDED : ஏப் 15, 2024 12:52 AM

ராஜபாளையம், - ராஜபாளையத்தில் நீர் காத்த அய்யனார் சுவாமி சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது.
விழாவை முன்னிட்டு இரவு பெரிய சாவடி முன்பு தொடரில் இசை நிகழ்ச்சி நடந்தது.அதிகாலை மாயூர நாத சாமி கோயிலில் நீர் காத்த அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து யானை வாகனத்தில் பாரம்பரிய வாத்தியங்களுடன் வீதி உலா பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், முடங்கியார் ரோடு வழியே என்.ஆர். கே மண்டபம் அடைந்தது.
மாலையில் சுவாமிக்கு கும்ப ஜெபம் சிறப்பு அபிஷேகம் செய்து 7:00 மணிக்கு ஊர்வலம் பெரிய மந்தையில் வான் வேடிக்கை வழிபாட்டுடன் வீதி உலா வந்து இரவு 11:00 மணிக்கு மாயூரநாதர் கோயிலை அடைந்தது.

