ADDED : நவ 27, 2025 05:01 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சவுக்கை தோப்பில் கட்டை ஏற்றிய லாரி மோதி வாலிபர் இறந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவானூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ், 20; மரம் வெட்டும் தொழிலாளி. நேற்று விக்கிரவாண்டி அடுத்த கெடார் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், 70; சவுக்கை தோப்பில் வேலைக்கு வந்தார்.
பிற்பகல் 3:15 மணி அளவில் சவுக்கை கட்டையை லாரியில் ஏற்றிவிட்டு லாரியின் முன்னால் தொழிலாளிகள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.மற்றவர்கள் எழுந்து சென்ற நிலையில் அவினாஷ் மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இதை அறியாமல் லாரி டிரைவர் லாரியை எடுத்த போது அவினாஷ் மீது முன்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
புகாரின் பேரில் கெடார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து உளுந்துார்பேட்டை அடுத்த திம்மிரெட்டிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் விக்னேஷ்,28 ; கைது செய்தனர்.

