/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபைல் போன் டவரில் உதிரி பாகங்கள் திருட்டு உ.பி., வாலிபர் கைது
/
மொபைல் போன் டவரில் உதிரி பாகங்கள் திருட்டு உ.பி., வாலிபர் கைது
மொபைல் போன் டவரில் உதிரி பாகங்கள் திருட்டு உ.பி., வாலிபர் கைது
மொபைல் போன் டவரில் உதிரி பாகங்கள் திருட்டு உ.பி., வாலிபர் கைது
ADDED : அக் 23, 2024 06:30 AM

வானுார், : கிளியனூர் அருகே தனியார் மொபைல் போன் டவரில் இருந்த உதிரி பாகங்களை திருடிய வெளி மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மற்றும் கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் உள்ள தனியார் டவரில் இருக்கும் உதிரி பாகங்களை மர்ம ஆசாமிகள் திருடிச்செல்வது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், திண்டிவனம் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை மேம்பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.
அவர், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நவ்ஷாத், 27; என்பதும், திண்டிவனம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிளியனுார் அடுத்த ஓமந்துாரில் அமைப்பட்டுள்ள தனியார் மொபைல் போன் டவரில் இருந்த உதிரி பாகங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, கிளியனுா் போலீசில் ஒப்படைத்தனர்.