/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கிளியனுாரில் குழந்தை உட்பட 2 பேர் பலி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கிளியனுாரில் குழந்தை உட்பட 2 பேர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கிளியனுாரில் குழந்தை உட்பட 2 பேர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கிளியனுாரில் குழந்தை உட்பட 2 பேர் பலி
ADDED : அக் 20, 2025 10:47 PM

வானுார்: கிளியனுார் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கொடிமா திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் அசோக்குமார், 26; இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் மணிபாரதியுடன் வானுார் அடுத்த ஆப்பிரம்பட்டு கிராமத்திற்கு, மயிலத்தில் இருந்து தென்கோடிப்பாக்கம் வழியாக பஜாஜ் என்பீல்டு பைக்கில் சென்றார்.
கிளியனுார் அருகே கீழ்சித்தாமூர் நான்குமுனை சாலை சந்திப்பில் சென்றபோது. எதிரே, வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிபாரதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மற்றொரு பைக்கை ஓட்டி வந்த சந்துரு, அவருடன் வந்த பிரசாத் மகன்கள் ஹர்னிஷ், 5; சர்வீன், 3; ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த கிளியனுார் போலீசார் காயமடைந்த மணிபாரதியை, சென்னை தனியார் மருத்துவமனைக்கும், சந்துரு, சிறுவர்கள் ஹர்னிஷ், சர்வீன் ஆகியோரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு தீரவி சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை சர்வீன் நேற்று காலை 5:00 மணிக்கு இறந்தார்.
விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

