ADDED : டிச 24, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வன தோட்டத் துறையின் வடக்கு மண்டலம் சார்பில், விவசாயிகள் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.
வானுார் அடுத்த புளிச்சப்பள்ளம் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மேலாளர் ராமச்சந்திரன், உதவி மேலாளர்கள் பிரபாகரன், ராஜசேகர் ஆகியோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர். தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

