/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வணிக வளாகம் கட்ட சீரமைப்பு பணி மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
/
வணிக வளாகம் கட்ட சீரமைப்பு பணி மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
வணிக வளாகம் கட்ட சீரமைப்பு பணி மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
வணிக வளாகம் கட்ட சீரமைப்பு பணி மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : அக் 25, 2024 07:08 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு கோவில் இடத்தை சீரமைக்கும் பணியை பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரிய முதலியார்சாவடியில், ஸ்ரீ கருத்தக்காட்டு அய்யனார் கோவில் உள்ளது.
கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்ட நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
நேற்று காலை கோட்டக்குப்பம் நகராட்சி மூலம் அந்த பகுதியில் இருந்த பழமை வாய்ந்த மரங்களை ஜே.சி.பி., மூலம் அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணி நடந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அ.தி.மு.க., நகர செயலாளர் கணேசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் தலைமையில் திரண்டு, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கும், மரங்களை அப்புறப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நகராட்சி கமிஷனர் புகேந்திரி, கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே மாலை 4:45 மணிக்கு, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தங்கள் துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறியதால், சீரமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர்.

