sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கருவேல மரங்களை அகற்ற போதிய நிதி...  இல்லை!ஏரிகளில் நீரை சேமிப்பதில் சிக்கல்

/

கருவேல மரங்களை அகற்ற போதிய நிதி...  இல்லை!ஏரிகளில் நீரை சேமிப்பதில் சிக்கல்

கருவேல மரங்களை அகற்ற போதிய நிதி...  இல்லை!ஏரிகளில் நீரை சேமிப்பதில் சிக்கல்

கருவேல மரங்களை அகற்ற போதிய நிதி...  இல்லை!ஏரிகளில் நீரை சேமிப்பதில் சிக்கல்

1


ADDED : டிச 22, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற போதிய நிதி இல்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விளை நிலங்களுக்கு, குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு கட்டுப்பாட்டில் 624 ஏரிகள் உள்ளது. இதில், விழுப்புரத்தில் 506 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 118 ஏரிகளும் உள்ளது. இந்த இரு மாவட்ட ங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட ஏரிகளில் அளவுக்கு அதிகமாக சீமை கருவேல மரங்கள் பல ஏக்கர் பரப்பளவில் பரவி வளர்ந்துள்ளது.

சீமை கருவேல மரங்கள் 10 முதல் 12 அடி உயரம், நிலத்திற்கு அடியில் கருவேல மரத்தின் வேர் 155 அடி நீளம் செல்லக்கூடியதாகும். இதனால் மற்ற மரங்களை விட, சீமை கருவேல மரத்தின் வேர் ஆழத்திற்கு சென்று, அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாகும். இவை ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்கள், தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கும்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் ஏரிகள் சீரமைப்பு பணிகள் நடப்பது வழக்கம்.

இந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசு மூலம் சரியாக பணம் வராததால் அந்த பணிகளும் சரியாக நடைபெறவில்லை.

மேலும், ஏரிகளில் மராமத்து பணிகள் முற்றிலுமாக நடைபெறவில்லை. தற்போது, பல ஏரிகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், தற்பேது வரை பெய்துள்ள வடகிழக்கு பருவமழை தண்ணீரை பாசனத்திற்கு தேக்க பல ஏரிகள் முடியாமல் வறண்ட நிலையில் உள்ளது.

இதற்கு உதாரணமாக விழுப்புரம் நகரில் உள்ள வழுதரெட்டி ஏரி, வி.மருதுார் ஏரியையும் கூறலாம்.

சீமை கருவேல மரங்களை அகற்றாதது குறித்து பொதுப்பணி துறை அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் முடிந்த வரை சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடக்கிறது.

இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற போதுமான நிதியில்லை. இதற்காக அரசு தனி நிதி ஒதுக்காததால், அலுவலர்களின் ஊதியத்தில் இருந்து ஜே.சி.பி., வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. கூடுமான வரை துரிதமாக ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us