
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளராக பெரியசாமி பொறுப்பேற்றார்.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளராக இருந்த யசோதாதேவி கடந்த மாதம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, கும்பகோணம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த பெரியசாமி, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

