ADDED : ஆக 24, 2025 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி சார்பில், 8, 14, 15 வார்டு மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசினார். நகராட்சி கமிஷனர் வசந்தி, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, தாசில்தார் கனிமொழி, தி.மு.க., நகர இளைஞரணி மணிகண்டன், அயலக அணி ஓம்லக்கி, ஜனா, வார்டு செயலாளர்கள் ரகு, ஜோதிகுமார், சம்பத்குமார், கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் பிரியா பிரேம், ராஜி நகர நிர்வாகிகள் குமார், புகழேந்தி, ரத்தினம், சசி, சுரேந்தர், தண்டபாணி, சீனுவாசன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.