ADDED : மார் 30, 2025 03:01 AM

விக்கிரவாண்டி : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், ஊராட்சி தலைவர் சாவித்ரி கவியரசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், நாராயணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் அலமேலு வரவேற்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார். கலைஞர் வீடு கட்டும் திட்டம், சாலை வசதி, வீட்டுமனை பட்டா, கூடுதல் ரேஷன் கடை, தெரு விளக்கு வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர்.
ஒன்றிய தலைவர் முரளி, கவுன்சிலர் சாவித்திரி பாலு, கிளைச் செயலாளர் குமரவேலு, கலை இலக்கிய அணி கலைச்செல்வன், மாணவரணி கருணாநிதி ராஜன், வழக்கறிஞர் கேசவன், ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம்
வடவாம்பலம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களைப் பெற்று பேசுகையில், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சேர்மன் வாசன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஊராட்சி தலைவர் லிங்கேஸ்வரி ஜவகர், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார், கிளைச் செயலாளர் லட்சகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சச்சிதானந்தம், துணைத்தலைவர் வடிவேல், பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

