/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு மாவட்ட வேளாண் அதிகாரி ஆய்வு
/
பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு மாவட்ட வேளாண் அதிகாரி ஆய்வு
பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு மாவட்ட வேளாண் அதிகாரி ஆய்வு
பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு மாவட்ட வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : டிச 24, 2025 06:50 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ராபி பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு பணியை மாவட்ட வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வட்டார வேளாண் துறை சார்பில் ராபி பருவ பயிர் சாகுபடி பரப்பை கணக்கீடு செய்யும் பணி மின்னணு முறையில் நடைபெற்று வருகிறது.
நேற்று சின்னதச்சூர் கிராமத்தில் நடந்த கணக்கீடு பணியினை மாவட்ட வேளாண்மை அதிகாரி சீனி வா சன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் ராபி பருவ மின்னணு பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் பருவம் வாரியாக எவ்வளவு பரப்பளவு சாகுபடி செய்யப்படுகிறது என துல்லியமாக அறிய முடியும்' என்றார்.
உதவி இயக்குநர்கள் விஜயகுமார், கங்கா கவுரி, வேளாண் அலுவலர் கவிப் பிரியன், துணை வேளாண் அலுவலர் ரமேஷ் குமார், தன்னார்வலர் புனிதாவதி உடனிருந்தனர்.