/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்திற்கு அரசு அனுமதி ஆய்வு பணிக்கு ரூ.41 லட்சம் ஒதுக்கீடு

ADDED : டிச 24, 2025 06:36 AM
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் - ஒரத்துார் ரயில்வே மேம்பாலத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆய்விற்காக முதல் கட்டமாக 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி முண்டியம்பாக்கம் - ஒரத்துார் சாலையில் ரயில்வே கிராசிங்கை கடக்க மருத்துவ கல்லுாரிக்குச் செல்லும் ஆம்புலன்ஸ், கரும்பு விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து, முண்டியம்பாக்கம் ரயில்வே கிராஸிங் எண்.11 7ல் ரயில்வே கி.மீ., 156/200 பகுதியில் முண்டியம்பாக்கம் - ஒரத்துார் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி அளித்து, ஆய்விற்காக முதல் கட்டமாக 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான பரிசோதனைகளை துவங்க உள்ளது.