sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.1 லட்சம் குட்கா கடத்தல் கார் பறிமுதல்: 4 பேர் கைது

/

ரூ.1 லட்சம் குட்கா கடத்தல் கார் பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.1 லட்சம் குட்கா கடத்தல் கார் பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.1 லட்சம் குட்கா கடத்தல் கார் பறிமுதல்: 4 பேர் கைது


ADDED : பிப் 05, 2024 05:49 AM

Google News

ADDED : பிப் 05, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை ஆரோவில் அருகே போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் மொரட்டாண்டி சந்திப்பில் நேற்று காலை ஆரோவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காரில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பேரில், காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், பெங்களூரு கார்ப்பரேஷன் காலனியைச் சேர்ந்த ஜோதிராஜ் மகன் முரளி, 34; திருவண்ணாமலை மாவட்டம், ஆனநந்தல் புதுகாலனி பொன்னுசாமி மகன் முருகன், 38; பெங்களூருபுரம் பாரத் மாதா லே-அவுட் வடிவேல் மகன் ருத்ரகுமார், 21; எனவும், மொரட்டாண்டி பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மொரட்டாண்டியில் மளிகைக்கடை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாகமணி, 40; மற்றும் காரில் வந்த 3 பேர் என 4 பேரையும் கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us