/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
/
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2025 06:44 AM

விழுப்புரம்: தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சரவண பாண்டியன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் முனுசாமி, துணைத் தலைவர் சாம்பமூர்த்தி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் மதியழகன், சின்னசாமி, குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட தணிக்கையாளர் உமா சந்திரன் நன்றி கூறினார்.