sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ஓட்டு குறைந்தால் பதவி காலி: அமைச்சர் எச்சரிக்கையால் சுறுசுறு

/

 ஓட்டு குறைந்தால் பதவி காலி: அமைச்சர் எச்சரிக்கையால் சுறுசுறு

 ஓட்டு குறைந்தால் பதவி காலி: அமைச்சர் எச்சரிக்கையால் சுறுசுறு

 ஓட்டு குறைந்தால் பதவி காலி: அமைச்சர் எச்சரிக்கையால் சுறுசுறு


ADDED : ஏப் 12, 2026 04:02 PM

Google News

ADDED : ஏப் 12, 2026 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர்-:

தேர்தல் பணியில் சுணக்கமாக இருப்பதாக அமைச்சர் பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கட்சியினர் சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கி விட்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில், செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய 3 தொகுதிகள் உள்ளது. இதில் செஞ்சி தொகுதியில் மட்டும் தி.மு.க., வேட்பாளராக, மஸ்தான் மீண்டும் களம் காண்கிறார். மயிலத்தில் தே.மு.தி.க.,வேட்பாளர் வெங்கடேசன், திண்டிவனத்தில் வி.சி. வேட்பாளராக வன்னி அரசு போட்டியிடுகிறார்.

இதில் மயிலம், திண்டிவனம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் பணியாற்ற வில்லை என தி.மு.க., தலைமைக்கு புகார் சென்றது.

அதனைத் தொடர்ந்து, மயிலம் தொகுதியில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சண்முகம் நிற்பதால், அவரை சமாளிப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதே போல் திண்டிவனம் தொகுதியில் மண்டல பொறுப்பாளரான அமைச்சர் பன்னீர்செல்வத்தை கூடுதல் கவனம் செலுத்தும்படி கட்சித் தலைமை அறிவறுத்தியுள்ளது.

இதனால், அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், திண்டிவனம் தி.மு.க., நகர மன்ற தலைவர், கவுன்சிலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் குறைவாக ஓட்டு வாங்கக்கூடாது. கவுன்சிலர்கள், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களாகிய உங்கள் வார்டுகளில் தி.மு.க.,கூட்டணிக்கு ஓட்டுகள் குறைந்தால் உங்கள் பதவி இருக்காது, நீங்களே எழுதி கொடுத்துவிட்டு போய்விடுங்கள். பதவி நிலைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வார்டிலும் திமு.க.,கூட்டணிக்கு கூடுதல் ஓட்டுகள் வாங்கித்தர வேண்டும் என அமைச்சர் எச்சரித்தாா். இதனால், தேர்தல் வேலையில் சுறுசுறுப்பாக இறங்கி விட்டனர்.






      Dinamalar
      Follow us