/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பேரூராட்சியில் நியமன கவுன்சிலர் பதவியேற்பு
/
செஞ்சி பேரூராட்சியில் நியமன கவுன்சிலர் பதவியேற்பு
செஞ்சி பேரூராட்சியில் நியமன கவுன்சிலர் பதவியேற்பு
செஞ்சி பேரூராட்சியில் நியமன கவுன்சிலர் பதவியேற்பு
ADDED : நவ 27, 2025 05:00 AM

செஞ்சி: செஞ்சி பேரூராட்சியில் கவுன்சிலராக நியமிக்கப்பட்ட மாற்றுதிறனாளி பதவியேற்பு விழா நடந்தது.
செஞ்சி பேரூராட்சியில் நியமன கவுன்சிலராக மாற்று திறனாளி உமா மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், நேற்று பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார் ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் கலையரசி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜலஷ்மி செயல்மணி, கவுன்சிலர்கள் கார்த்திக், ஜான்பாஷா, சங்கர், அஞ்சலை நெடுஞ்செழியன், சிவக்குமார், பொன்னம்பலம், அகிலா வேலு, சுமித்ரா சங்கர், மோகன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.