/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்குகள் மீண்டும் அட்டகாசம் திண்டிவனம் அருகே 13 ஆடுகள் பலி: தொடரும் சம்பவங்களால் விவசாயிகள் பீதி

ADDED : ஆக 25, 2025 12:18 PM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மர்ம விலங்குகள் மீண்டும் கடித்து குதறியதில் 13 ஆடுகள் பலியான சம்பவம், விவசாயிகளை பீதியடைய செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை, சேவூர், இறையானுார், கொங்கரப்பட்டு, குடிசைப்பாளையம் ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து மர்ம விலங்குகள் ஆட்டுப்பண்ணையில் புகுந்து கடித்து குதறியதில், 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. மேலும் 60க்கு மேற்பட்ட ஆடுகள் காய மடைந்தன.
கடந்த 5 நாட்களுக்கு முன், தாதாபுரத்தில் மர்ம விலங்கு கடித்ததால், 6 ஆடுகள் பலியான நிலையில், அது போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, திண்டிவனம்-வந்தவாசி ரோட்டிலுள்ள புத்தனந்தல் கிராமத்தை சேர்ந்த செல்வி,45; என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுப்பண்ணையில் மர்ம விலங்குகள் கும்பலாக புகுந்து கடித்த குதறியதில் 13 ஆடுகள் பலியாகின. 10 ஆடுகள் காயமடைந்தன.
இதுகுறித்து செல்வி, வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, பலியான ஆடுகளை ஆய்வு செய்தனர்.
காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பலியான ஆடுகளை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்த பிறகு, குழிதோண்டி புதைக்கப்பட்டன.
மயிலம் தொகுதி மற்றும் திண்டிவனம் தொகுதியை சேர்ந்த பல இடங்களில் மர்ம விலங்குகள் கடித்ததால் தொடர்ந்து ஆடுகள் பலியாவது விவசாயிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகளை அச்சுறுத்தி வரும் மர்ம விலங்குகளை வனத்துறையினர் சுட்டு பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.