ADDED : அக் 30, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி கோவில்களில் கந்த சஷ்டி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி விழா 22ம் தேதி துவங்கியது.
முதல் நாள் திருமுருகன் தோற்றம், 2 ம் நாள் தந்தைக்கு உபதேசம், 3ம் நாள் தாருகன் வதம், 4ம் நாள் சிங்க முகன் வதம், வீரபாகு துாது, 5ம் நாள் வேல் வாங்குதல் மற்றும் கடந்த, 27ம் தேதி இரவு சூரசம்ஹாரமும், நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
பி. ஏரிக்கரை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், கொத்தமங்கலம் சாலை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில், பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவில் உள்ளிட்டைவகளிலும் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

