/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை வழக்கு; விக்கிரவாண்டியில் கணவர் கைது

ADDED : மார் 06, 2024 03:25 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு துாண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் கோபிநாத், 33; மெயின்ரோட்டில் மாரியம்மன் கோவில் எதிரே மரம் இழைப்பகம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பெண்ணரசி, 29; இவர், கடந்த 3ம் தேதி மகள் கிருத்திகா, 7; மகன் மோனிஷ், 4; ஆகிய இருவரையும் துாக்கில் போட்டு கொலை செய்து விட்டு பெண்ணரசியும் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, பெண்ணரசியின் தந்தை அரிகிருஷ்ணன், தனது மகள் சாவுக்கு கோபிநாத், அவரது தந்தை மற்றும் தாய், தம்பி ஆகியோர் காரணம் என, விக்கிரவாண்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தற்கொலைக்கு துாண்டியதாக பெண்ணரசியின் கணவர் கோபிநாத்தை நேற்று கைது செய்தனர்.