/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் அவசர கால சீட் ஒதுக்க கோரி மத்திய அமைச்சரிடம் எம்.எல்.ஏ., மனு
/
ரயிலில் அவசர கால சீட் ஒதுக்க கோரி மத்திய அமைச்சரிடம் எம்.எல்.ஏ., மனு
ரயிலில் அவசர கால சீட் ஒதுக்க கோரி மத்திய அமைச்சரிடம் எம்.எல்.ஏ., மனு
ரயிலில் அவசர கால சீட் ஒதுக்க கோரி மத்திய அமைச்சரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : டிச 21, 2025 06:16 AM

விக்கிரவாண்டி: ரயிலில் பயணம் செய்ய எம்.பி.களுக்கு அவசர கால இருக்கை ஒதுக்கீடு உள்ளது போல அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களுக்கும் வழங்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., அளித்தார்.
மனு விபரம்:
ரயில்வே துறையில் தற்போது ரயலில் பயணம் செய்யும் எம்.பி.,களுக்கு அவசர கால இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. எம்.பி.,களின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து ரயில்வே துறைக்கு கோரிக்கை விண்ணப்பம் அனுப்பினால், அந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு அவர்கள் பயணம் செய்யும் ரயிலில் அவசர கால ஒதுக்கீட்டின் கீழ் இருக்கைகள் உறுதி செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்கின்றனர்.
ஆனால் எம்.எல்.ஏ.,க் கள் தலைமை செயலகத்திற்கோ அல்லது அவர்கள் வசிக்கும் ரயில் நிலையத்திற்கு சென்று விண்ணப்பம் அளிக்க வேண்டும்.அப்படி விண்ணப்பித்தாலும் இருக்கைகள் கிடைப்பதில்லை.
எனவே எம்.பி.,களுக்கு உள்ளது போல இந்தியாவில் உள்ள அனைத்து மாநில எம்.எல்.ஏ.,களுக்கும் மெயிலில் விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற மத்திய அமைச்சர் பரிசீலனை செய்வதாக கூறினார்.
எம்.பி.,க்கள் செல்வகணபதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஈஸ்வரசாமி, ராணி ஸ்ரீகுமார் உடன் இருந்தனர்.

