/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தலன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் தயார்! தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
/
தேர்தலன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் தயார்! தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
தேர்தலன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் தயார்! தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
தேர்தலன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் தயார்! தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
ADDED : மார் 22, 2024 10:21 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் அன்று ஓட்டுச்சாவடிளில் பயன்படுத்தும் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவைகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி துவங்கியது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் (தனி) தொகுதி, ஆரணி தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி தலைமையில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 1,966 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இந்த ஓட்டுச்சாவடி மையங்களில், தேர்தலன்று ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள படிவங்கள், வாக்காளர் பட்டியல், பேலட் பேப்பர் ஷீட், பேனா, பென்சில், ரப்பர், குண்டூசி, சீல் வைக்கும் அரக்கு, நுால், பைல் டேக், பேப்பர் சீல், ஓட்டுப்பதிவு மறைப்பு அட்டை, தபால் உறைகள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட பொருட்கள், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு அச்சகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் நிலையங்களில் இருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது,
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், 2 தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு அறையில் இந்த பொருள்கள் வந்திறங்கியது.
இந்த பொருட்கள், தனித்தனியாக பிரித்து, மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திருக்கோவிலுார், திண்டிவனம், செஞ்சி, வானுார் ஆகிய சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கியது.
இதனையடுத்து, தேர்தல் நடப்பதற்கு முன்தினம், தனி பைகளில் கட்டப்பட்டு, அங்கிருந்து அந்த பொருட்கள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்திற்கும் பிரித்து கொண்டு செல்லப்பட்டு, ஓட்டுப்பதிவின்போது பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

