ADDED : டிச 22, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்க கல்வெட்டு திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் திலீபன், சட்ட ஆலோசகர் சேரலாதன் நகர செயலாளர் சந்துரு முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ஞானம் வரவேற்றார்.
ரவிக்குமார் எம்.பி., தொழிற்சங்க கல்வெட்டை திறந்து வைத்து, சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
வி.சி., ஒன்றிய செயலாளர்கள் கிட்டு, ஜெயச்சந்திரன், சரவணன் அசோக் குமார், விஜய வளவன், சரண்ராஜ், சுரேஷ், ராஜாமணி, ஏழுமலை, கவியரசன், லட்சுமி நாராயணன், சங்க துணைச் செயலாளர்கள் பழனி மாரியம்மாள், நாகராஜ், ரவிதா உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

