/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முடி திருத்தும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு
/
முடி திருத்தும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு
ADDED : அக் 23, 2024 04:55 AM

அவலுார்பேட்டை : செஞ்சியில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
மாநில தலைவர் நடேசன், மாநில நிர்வாகிகள் ராஜன், குமார், ஆதிமருத்துவன் சிவா, சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், கொடி ஏற்றி சங்க பெயர் பலகை திறந்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மேள, தாளத்துடன் நடந்த ஊர்வலத்தில் இட ஒதுக்கீடில் உள் ஒதுக்கீடும், சமூக மக்களுக்கு பாதுகாப்பு சட்டமும், அழகு நிலையங்களை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டது.
சேகர், ரவி, தண்டபாணி, பத்மநாபன், கருணாநிதி, ரகுபதி, கன்னியப்பன், ரமேஷ், அஜித், குமார் துரைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

