/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரசாயன பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்க்க வேண்டும் தோட்டக்கலைத் துறை தகவல்
/
ரசாயன பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்க்க வேண்டும் தோட்டக்கலைத் துறை தகவல்
ரசாயன பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்க்க வேண்டும் தோட்டக்கலைத் துறை தகவல்
ரசாயன பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்க்க வேண்டும் தோட்டக்கலைத் துறை தகவல்
ADDED : செப் 07, 2025 05:16 AM
விக்கிரவாண்டி: விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜெய்சன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விவசாயத்தில் அதிக அளவு ரசாயன பூச்சிக்கொல்லிகள், வேதியியல் உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்தையும், விளை பொருட்களின் தரத்தையும் பாதிக்கிறது. எனவே, விவசாயிகள் குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் விவசாயிகள் பாரம்பரிய காய்கறி, பழங்கள், நெல், சோளம், கேழ்வரகு, திணை, சிறுதானியங்கள் போன்ற வகைகளை அதிகம் பயிரிட வேண்டும்.
அதிக செலவில்லாமல் நல்ல உற்பத்தி பெறுவதற்கு, டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிரி உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
பசுமை உரம், நாட்டு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கோமியம், கழிவு உரம் போன்றவை பயன்படுத்தப்பட்டால் பயிர்கள் ஆரோக்கியமாக வளரும்.
அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் உயிரி உரங்கள், இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் குறித்து விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் இத்திட்டங்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.